Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மூடப்பட்டது ஏ9 வீதி பொலிஸார் குவிப்பு! பாரிய ஆர்ப்பட்டம்! மூவரை பலியெடுத்த வாகனத்தின் நிலை!



தம்புள்ளையில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த டிப்பா் ரக வாகனம் ஒன்று, மேலதிக வகுப்பிற்கு செல்வதற்காக வீதி ஓரமாக நின்று கொண்டிருந்த நான்கு மாணவா்கள் மீது மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.
விபத்தில் மூன்று மாணவா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒரு மாணவா் படுகாயமடைந்து தம்புள்ளை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவத்தின் பின்னா் டிப்பர் ரக வாகனத்தை கெக்கிராவ – ரணஜயபுர பகுதியில் வைத்து பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.
கெக்கிராவை திப்பட்டுவெவவில் வாகன விபத்தில் மூவர் பலியான சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த விபத்து இன்று காலையே இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த மூவரையும் மோதிய வாகனம் நிறுத்தாது தப்பிச் சென்றுள்ளதால் அப்பகுதி பிரதான வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments