Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 30ஆம் திகதி?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை டிசம்பர் 7ஆம் திகதி நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு, யோசனை முனவைத்துள்ள போதிலும் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 30ஆம் திகதி நடக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலை சுட்டிக்காட்டி சிங்கள ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், அவர் வெற்றி தினத்தில் பதவிப்பிரமாணம் செய்து, பணிகளை தொடங்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அவர் முதல் தவணை பதவி பிரமாணம் செய்து, 5 ஆண்டு பூர்த்தியான பின்னர் அதாவது 2020ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி பதவி பிரமாணம் செய்ய வேண்டும்.
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் ஒரு மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இதற்கு அமைய டிசம்பர் 9 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் ஆணைக்குழு முன் வைத்துள்ள டிசம்பர் 7ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்த முடிவு செய்தால், ஏதேனும் அரசியல் நெருக்கடி அல்லது காலநிலை பிரச்சினைகள் ஏற்பட்டு தேர்தலை நடத்த முடியாமல் போனால், பாரதூரமான அரசியலமைப்பு சட்ட பிரச்சினை ஏற்படும் என்பதால், டிசம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர், அதாவது நவம்பர் 30ஆம் திகதி தேர்தலை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments