Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கல்முனை தமிழ் சிங்கள கிறிஸ்தவ மக்களின் பெரும் ஆதரவுடன் 1000 மெழுகுவர்த்தி போராட்டம் (photos)


(பாறுக் ஷிஹான்) கல்முனை தமிழ்  சிங்கள கிறிஸ்தவ மக்களின் பெரும் ஆதரவுடன்    உண்ணாவிரதப்போராட்டம் மூன்றாவது நாளாக 1000 மெழுகுவர்த்தி ஒளி ஏற்றப்பட்டு  தொடர்கிறது .

இன்று (19) மாலை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரும் சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்ம்  வலுவடைந்த நிலையில் ஒன்று கூடிய பெரும் திரளான மக்கள் இவ்வாறான நூதனமான போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இப்போராட்டத்தில் பங்குகொண்டவர்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பி தத்தமது கைகளில் மெழுகுதிரிகளை ஏந்திய வண்ணம் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இப்போராட்டத்தில் அருட்சகோதரர்கள் பல்வேறு அமைப்பு சார் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பெரும் திரளானோர் பங்கு பற்றினர்.


























Post a Comment

0 Comments