Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

CID அலுவலகத்தில் தொங்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தலைகள்! காட்டிக்கொடுக்கப் போகும் சகோதரி


ஐ.எஸ் பயங்கரவாதி மொஹமட் சஹ்ரானின் மரபணு பரிசோதனைக்காக அவரது சகோதரியை கொழும்பு சட்ட வைத்தியரிடம் அழைத்து செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய இன்றைய தினத்திலிருந்து 15 ஆம் திகதிக்குள் சஹ்ரானின் சகோதரியை கொழும்புக்கு அழைத்து வருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்கொலை குண்டுதாரிகளான சஹ்ரான் மற்றும் மொஹமட் இன்ஸாம் இப்ராஹிமின் உடற்பாகங்கள் குற்ற விசாரணை திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளன.
உடற்பாகங்களை பயன்படுத்தி மரபணு பரிசோதனை மூலம் உறுதி செய்யுமாறு கோட்டை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மொஹமட் இன்ஸாம் இப்ராஹிமின் தந்தை மற்றும் சகோதரர்கள் இருவரின் இரத்த மாதிரிகளை பெற்றுக்கொள்வதற்காக விசேட சட்ட வைத்தியரிடம் அவர்களை ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தற்கொலை குண்டுத்தாக்குதல்களுக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் சொகுசு வாகனங்கள் இரண்டு உட்பட 7 வாகனங்கள் தொடர்பில் அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கை கோருமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments