Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொழும்பில் வெறியாட்டம் ஆடிய ஐ.எஸ் பயங்கரவாதம்! வெளிநாட்டுக்கு தப்பியோடிய தற்கொலை குண்டுத்தாரிகள்


இலங்கையில் தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர் சவுதி அரேபியாவுக்கு தப்பிச் சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளர்.
கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரானுடன் நெருக்கமாக செயற்பட்டவர் என புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த தீவிரவாதிகள் கடந்த மாத தற்கொலை குண்டுத்தாக்குதலின் பின்னர் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் தாக்குதல் மேற்கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த தீவிரவாதிகள் தொடர்பில் புலனாய்வு பிரிவினால் சர்வதேச பொலிஸார் ஊடாக சவுதி அரேபியாவுக்கு வழங்கிய தகவல்களுக்கமைய அங்கு பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தீவிரவாதிகளை பிடிப்பதற்கதாக இலங்கை புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ள நிலையில், அங்குள்ள பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட விசாரணைகளில் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

Post a Comment

0 Comments