Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொடூரமான தாக்குதலில் முழுக் குடும்பத்தையும் இழந்த பெண்! தேவாலயத்தில் தொலைந்த வாழ்க்கை


உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் தனது கணவர் உட்பட முழு குடும்பத்தையும் இழந்த பெண் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
கட்டுவப்பிட்டி செபஸ்டியன் தேவாலய தற்கொலை தாக்குதலில் குமாரி என்ற பெண் தனது முழு குடும்பத்தை பறி கொடுத்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குமாரி,
“நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். இது கடவுள் கொடுத்த வரமாகவே நினைத்தேன். எனினும் எனது குடும்பத்தையும் எனது தங்கையின் குடும்பத்தையும் முழுமையாக பறிகொடுத்து விட்டோம்.
முழு குடும்பமாக உயிர்த்த ஞாயிறு ஆராதனைக்கு சென்று மீண்டும் தனியாகவே திரும்பிவர அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
எங்கள் கிராமம் மிகவும் அதிஷ்டமான ஒரு கிராமமாகும். சுனாமி, வரட்சி உட்பட எந்தவொரு அனர்த்தத்திலும் பாதிக்கப்பட்டதில்லை. எனினும் இன்று நான் தனி மரமாகி விட்டேன்.
தாக்குதலில் உயிரிழந்த எனது மூத்த மகள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை பெற்றிருந்தார். கடைசி மகன் பாடசாலை கல்வியை தொடர்ந்து வந்தார்.
மகள் இரண்டு பட்டம் பெற வேண்டும் என கூறிக்கொண்டிருந்தார். எனது பிள்ளைகள் பெரியவர்களாகிய போது எனது கையிலேயே உறங்குவார்கள். எல்லாம் இழந்து விட்டேன். இனியேனும் இந்த நாட்டில் ஒரு சமாதானம் கிடைக்க வேண்டும்.
எங்களுக்கு எவ்வித இனவாதமும் கிடையாது. எனக்கு பிள்ளைகளும் இல்லை குடும்பமும் இல்லை. இனி நான் கேட்பதற்கு என்ன உள்ளது? இனியாவது சமாதானம் இந்த நாட்டிற்கு கிடைக்க வேண்டும் என்று மாத்திரமே கேட்பதற்கு உண்டு” என கண்ணீருடன் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments