Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் காலை 8 மணிக்கு பாடசாலைகளை தொடங்க அனுமதி


வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பாடசாலைகளை காலை 8 மணிக்கு தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில் கொண்டே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேலும்,
பாடசாலைகளை தொடங்குவது குறித்து ஏராளமான அதிபர்கள், ஆசிரியர்களின் கருத்துகள் கண்டறியப்பட்டு இது தொடர்பாக வடக்கு - கிழக்கு மாகாணக் கல்வி பணிப்பாளர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகள் காரணமாக மாணவர்களால் உரிய நேரத்தில் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாது என இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் பாடசாலைகளை காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணிக்கு நிறைவு செய்வதற்கு மாகாண கல்விப் பணிப்பாளர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
பாடசாலைகளை காலை 8 மணிக்கு ஆரம்பிக்க அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள் வலய கல்வி பணிப்பாளர்களிடம் அனுமதி பெற்று கொள்ள முடியும்.
இது ஒரு தற்காலிக ஏற்பாடாகவே இருக்கும் எனவும், அதிபர்களின் வேண்டுகோள்கள் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளனர்.
ஆகையால் இடர்பாடுகள் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் உடனடியாக வலயக் கல்விப் பணிப்பாளர்களின் அனுமதியை பெற்று பாடசாலைகளை காலை 8 மணிக்கு தொடக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments