Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இரண்டு மாடி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தோட்டாக்களுடன் பெண்ணொருவர் கைது


ஸ்ரீ ஜயவர்தனபுர - புறக்கோட்டை, எபிட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 193 தோட்டக்கள், அருள் 89 ரக ஆர்.பீ.ஜி தோட்டக்களுடன் பெண்ணொருவரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த தோட்டக்கள் விடுதலைப் புலிகள் பயன்படுத்தியவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தோட்டக்களை பழைய பொருட்களாக வீட்டில் அலங்காரத்திற்கு வைக்க கொண்டு வந்ததாக, கைது செய்யப்பட்ட பெண் , பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
வீட்டின் மேல் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளுக்கு கீழே நிர்மாணிக்கப்பட்டிருந்த அலுமாரியில் உரை பைகளில் தோட்டக்கள் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
புலிச் சின்னத்துடன் கூடிய பையில் இவை பொதி செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Post a Comment

0 Comments