Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புர்கா ஆடை குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடல்


புர்கா ஆடைக்கு அவசர நிலைமைகளின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆடை விவகாரம் தொடர்பில் அமைச்சரவையிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி: அவசரகால நிலைமைகளில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து உடை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தாங்களும் அந்த முறையை நீக்கும் வகையில் தனிநபர் பிரேரணையினை சமர்ப்பித்துள்ளீர்கள்?
பதில்: ஆம். தற்கொலைத் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டவுடன் தான் நான் அவ்வாறான முடிவொன்றை எடுக்க நேரிட்டது.
நாட்டின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மேற்படி தீர்மானத்தினை எடுத்திருந்தோம். அந்த வகையில் நான் முகத்தை மூடியவாறு குறித்த ஆடை அணிவதை தடை செய்யக்கோரி தனிநபர் பிரேரணையை சபாநாயகரிடத்தில் சமர்ப்பித்துள்ளேன்.
குறித்த பிரேரணையை ஒழுங்கு புத்தகத்தில் உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் எடுத்துள்ளார்.
அதன் பின்னர் தான் இப்பிரேரணை எப்போது விவாதத்திற்கு எடுப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படும். அதனை சபாநாயகரும், நாடாளுமன்ற செயலாளருமே தீர்மானிப்பர்.
தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு விரைவில் அது குறித்து தீர்மானம் எடுப்பார்கள் என்று கருதுகின்றேன்.
தற்போதைய நிலையில் இந்த புர்கா ஆடைக்கு அவசர நிலைமைகளின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை விடவும் இந்த ஆடை விவகாரம் தொடர்பில் அமைச்சரவையிலும் கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
அமைச்சரவைப் பத்திரமொன்றை தயாரிப்பது பற்றியும் பேசப்பட்டிருக்கின்றது. ஆகவே அது குறித்த நிலைமைகள் எவ்வாறு அமையும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

அமைச்சரவையில் முஸ்லிம் சகோதரர்களின் பிரதிநிதிகளின் ஆதரவுடன் தீர்மானம் எடுக்கப்படுமாக இருந்தால் எனது தனிநபர் பிரேரணை அவசியமாக இருக்காது.
அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுமாயின் நான் எனது பிரேரணையை திரும்ப வாங்குவேன்.
கேள்வி: தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்துள்ள நீங்கள் அப்பிரேரணைக்கு ஆதரவை பெறுவதற்காக உங்களுடைய மற்றும் ஏனைய அரசியல் தரப்பினருடன் கலந்துரையாடல்களை செய்திருக்கின்றீர்களா?
பதில்: உண்மையிலேயே டுபாய் போன்ற நாடுகளில் புர்கா ஆடைகள் மணல் புயலிலிருந்து பாதுகாப்பதற்காகவே அணியப்பட்டன.
வரலாற்று ரீதியாக பார்க்கின்ற போது இலங்கை வாழ் முஸ்லிம்கள் முழுமையாக முகத்தினை மூடியவாறு ஆடைகளை அணிந்ததில்லை.
அண்மைக்காலமாக தான் அத்தகைய கலாச்சாரமொன்று தோற்றம் பெற்றுள்ளது.
மேலும் அவர்களுடைய சமயத்திலும் கட்டாயமாக அவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கவில்லை.
இவ்வாறான நிலையில் குறித்த தனிநபர் பிரேரணையை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக எமது கட்சியில் உள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தேன்.
அவர்கள் தமது பூரண ஆதரவை வழங்குவதாகவும் இந்த விடயத்தினை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கான சந்தர்ப்பம் தற்போதே ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments