இலங்கையின் சில பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதன்படி குளியாப்பிட்டிய, பிங்கிரிய, தும்மலசூரிய, ஹெட்டிபொல உள்ளிட்ட பகுதிகளிலேயே பாதுகாப்பை ஸ்திரப்படுத்தும்பொருட்டு இந்த ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு நாளை அதிகாலை நான்கு மணிவரை அமுலில் இருக்குமென கூறப்பட்டுள்ளது.
மேற்படி பகுதிகளில் ஏற்பட்ட அசம்பாவிதங்களையடுத்து அங்கு தொடர்ந்தும் பதற்ற நிலை ஏற்படக்கூடும் என்பதால் அதனைக் கட்டுப்படுத்தும்பொருட்டு இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0 comments: