Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாடசாலை மாணவர்களுக்குப் போதைப் பொருள் விற்பனை! தடுக்க விசேட திட்டம் நடைமுறை!

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்கின்றவர்களுக்கெதிராக விஷேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளர் சம்மந்த குமார கித்தலவ ஆராச்சி தெரிவித்துள்ளார்.
இதற்காக பாடசாலையை பாதுகாக்கும் குழுக்களின் பங்களிப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்தத் திட்டத்தை காவல்துறையினரோடு இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, தரம் 6 ,7ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட மாணவர்கள் இதில் கூடுதலாக ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகவும், இவர்களை இதில் உள்வாங்குவதற்கு சிலர் முயற்சிப்பார்கள் எனவும் ஜனாதிபதி போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளர் சம்மந்த குமார கித்தலவ ஆராச்சிசுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments