Home » » தேடப்பட்டுவந்த சந்தேக நபர் புதிய காத்தான்குடியில் சிக்கினார்

தேடப்பட்டுவந்த சந்தேக நபர் புதிய காத்தான்குடியில் சிக்கினார்


பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த சந்தேக நபர் புதிய காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கொட்டாஞ்சேனை – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரி பயணித்த வானை கொள்வனவு செய்து, அதில் ஆசனங்களை பொருத்தியதான குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய காத்தான்குடியில் வைத்து புதிய காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் ஆதம் என்பவரே இவ்வாறு இன்று சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 21 ஆம் திகதி கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொள்வதற்காக குண்டுதாரி பயணித்ததாக தெரிவிக்கப்படும் வான் தேவாலயத்திற்கு அருகில் கடந்த 22 ஆம் தினதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் அதனை வெடிக்கச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |