Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கட்டுநாயக்க விமான நிலையம் செல்வோருக்கு முக்கிய செய்தி



கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக புதிய செயல்திறன்மிக்க நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்படவுள்ளன.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டிருப்பதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தின் புதிய பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பான செய்தியாளர் மகாநாடு இன்று காலை விமான நிலைய கட்டிடத்தில் நடைபெற்றது. 
இதில் கலந்து கொண்ட நிறுவனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
பயணிகளின் பொதிகளை பரிசோதனை செய்வதற்காக புதிய ஸ்கேனர்(Scanner) இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன. 
பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஏற்படக்கூடிய தாமதத்தை தவிர்த்துக் கொள்வதற்காக விமானம் புறப்படுவதற்கு முன்னர் 4 மணித்தியலாத்திற்கு முன்னதாக பயணிகள் விமான நிலையத்தை வந்தடைய வேண்டும்.
இதே போன்று பயணிகள் செல்லும் பொழுதும் விமான நிலையத்திற்கு வரும் பொழுதும் அவர்களது உறவினர்கள் நண்பர்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளன.
விமான நிலைய வளவில் வாகன நடைமுறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வரும் மற்றும் வெளியேறும் பொழுது மாறப்பட்ட வாகன இரண்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments