ஆளுநர் ஹில்புல்லாவை பதவி நீக்குமாறு கோரி திருகோணமலை நகரத்திலும், சுற்றியுற்ற நகரங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நகரத்தின் கந்தலாம, சேரநுவர மற்றும் தம்பலகமுல ஆகிய பகுதிகளில் கடையடைப்பு போராட்டம மேற்கொண்ட நிலையில் பேருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து ஒன்று திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பணித்த போது பேருந்தின் மீது கற் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் பேருந்தின் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும் சாரதி பேருந்தை நிறுத்தாமல் பயணித்துள்ளார்.
திருகோணமலை மட்டக்களப்பு வீதிகளை மறித்து டயர்கள் எறிக்கப்பட்டுள்ளது. எனினும் பொலிஸார் அதனை அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் காணப்படுவதாக தெரிய வருகிறது.
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து முப்படையினரும் அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எந்தவித அசாம்பாவிதங்களும் நடைபெறுவதை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
0 comments: