Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு பிரதமர் திடீர் விஜயம்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகளின் தற்கொலை தாக்குதலுக்கு இலக்கான சியோன் தேவாலயத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க,
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதத்தை இலங்கையில் இருந்து முற்றாக இல்லாதொழிக்க நடவடிக்கை எடுப்போம். 
அதற்காக பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் அதற்கு துணைபோகின்றவர்களின் தகவல் தெரிவந்தவர்கள் அதுதொடர்பில் பாதுகாப்பு பிரிவுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன் நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய பயங்கரவாதிகளின் சவாலை முறியடிப்பதற்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இதன்போது குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமுற்றவர்களுக்குமான நஷ்டஈட்டுத்தொகையும் பிரதமரினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments