பாகிஸ்தான் முக்கிய நகரமொன்றில் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான்பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிலுள்ள பள்ளிவாசலொன்றிலேயே இந்த குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் இருவர் உயிரிழந்ததுடன், 25 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது எனவும் குறித்த வெடிப்பு இடம்பெறும்போது பள்ளிவாசலுக்குள் சுமார் நூறு பேர்வரை தொழுகையில் ஈடுபட்டிருந்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments