இஸ்லாமிய பள்ளிவாசல்களில் தேடுதல் நடவடிக்கைகள் இதற்கு மேலும் அதிகரித்தால், நாட்டில் பாரிய அழிவொ ன்று இடம்பெறும் என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி எச்சரித்துள்ளார்.
ஆளுநர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கை யில் அவர் இதனைக் கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
பாதுகாப்புப் பிரிவினர் ஒரே முஸ்லிம் பள்ளிவாசலில் மேற்கொள்ளும் ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு தான் பாதுகாப்பு சபையில் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஒரே பள்ளிவாசலில் ஏழு முறைகள் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுக்க பாதுகாப்பு பிரிவினர் செல்கின்றனர்.
இதனால், பள்ளிவாசலில் சப்பாத்துக் கால்களுடன் சென்று எடுக்க ஒன்றும் இல்லாத நிலைக்குச் செல்கின்றன. நாய்களுடன் செல்கின்றனர். நாய் எடுத்து வருவதாக முன்னறிவிப்புச் செய்திருந்தால், நாம் அதற்கு ஏற்ற வகையில் ஒழுங்குகளை செய்து கொடுப்போம்.
அவ்வாறு செய்வதுமில்லை. தான் பாதுகாப்பு சபையில் இது குறித்து பேசவுள்ளதாகவும், இது போன்ற நிலைமைகள் ஏற்படக் கூடாது எனவும் ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டினார்.
0 Comments