பப்புவா நியூ கினியா நாட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு நூற்றுக்கும் அதிகமான மக்கள் பலியாகினர், பலகோடி மதிப்பிலான சொத்துகள் சேதம் அடைந்தன.
இந்நிலையில், பப்புவா நியூ கினியா நாட்டின் கோக்கோப்போ என்ற நகரின் வடகிழக்கே சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தில் இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் உருவான இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் பப்புவா நியூ கினியா மற்றும் அருகாமையில் உள்ள சாலமன் தீவு ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 comments: