நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் மொஹமட் அலி ஹசன், துப்பாக்கி ரவைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேற்படி மொஹமட் அலி ஹசன் வீட்டில் ஆயுதங்கள் இருப்பதாக பியகம பொலிசாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து மல்வானையில் உள்ள அவரது வீடு சோதனையிடப்பட்டது. இதன்போது, அங்கிருந்து 92 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன.
இந்த ரவைகள் Bor 12 துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படுவன எனவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மல்வானை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
0 comments: