Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஐ.எஸ் அமைப்பு உறுப்பினர் ஒருவரின் சகோதரர் கூரிய ஆயுதங்களுடன் கைது!



ஹட்டனில் ஐ.எஸ் அமைப்பு உறுப்பினரொருவரின் வீட்டிலிருந்து 9 கத்திகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டில் இருந்ததாக கூறப்படும் நபரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
2016ஆம் ஆண்டு குறித்த ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அவர் தற்போது யேமனில் வசித்து வருவதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து சந்தேகநபரின் ஹட்டன், மல்லியப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு பொலிஸாரால் சோதனையிடப்பட்டது. இதன்போது வீட்டின் களஞ்சிய அறையில் இருந்து 9 கத்திகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சகோதரர் ஹட்டன் மாவட்ட நீதவான் மற்றும் நீதவான் நீதிமன்றின் நீதவான் முன்னிலையில் முற்படத்தப்பட்டார். இதன்போது சந்தேக நபர் 20 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் ஜே.ட்ரொஸ்கி உத்தரவிட்டுள்ளார். அத்துடன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறும் சந்தேகநபருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை ஹட்டன், பொகவந்தலாவ, மஸ்கெலியா சாமிமலை, சாஞ்சிமலை சலகந்த ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் முச்சக்கரவண்டிகள், வான், பாரவூர்தி போன்ற வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்துவதோடு, பயணிகளின் அடையாள அட்டடை பைகள் என்பனவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

Post a Comment

0 Comments