Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உயிர்த்தஞாயிறு தாக்குதலை அடுத்து காத்தான்குடியில் மட்டும் 63 பேர் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு மற்றும் கைதுகள் இடம்பெற்று வருகின்றன.இந்தநிலையில் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதத்துடன் தொடர்புகொண்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 63 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலை மேற்கொண்டது காத்தான்குடியைச் சேர்ந்த பிரதான சூத்திரதாரி சஹ்ரான் என பொலிஸார் அடையாளம் கண்டு பிடித்ததையடுத்து. குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினர்,மற்றும் பொலிஸார், மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் கடந்த ஒரு மாத காலத்தில் 63 பேரைப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இதேவேளைத் தொடர்ந்து இந்த பிரதேசங்களில் இராணுவத்தினர் சுற்றிவளைப்பு தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது .

Post a Comment

0 Comments