Home » » மட்டக்களப்பில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு 30 ஏக்கர் பயிற்சி முகாம் விசேட அதிரடிப்படையினர் வசம்?

மட்டக்களப்பில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு 30 ஏக்கர் பயிற்சி முகாம் விசேட அதிரடிப்படையினர் வசம்?



மட்டக்களப்பு, ஓமனியாமடு - ரிதிதென்னவில் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாமொன்றை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது பெருமளவான வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் காத்தான்குடி நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பயற்சி முகாமொன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்று மற்றுமொரு முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி பிரதேசசபைக்குட்பட்ட இந்த பயிற்சி முகாம் 30 ஏக்கரிற்கும் அதிக விஸ்தீரணமுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காணி உரிமையாளர், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே, இன்று அங்கு தேடுதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மகாவலி திட்டத்திற்குச் சொந்தமான குறித்த 30 ஏக்கர் நிலப்பரப்பை வேறு ஒருவரின் பெயரில் குத்தகைக்கு வாங்கி இவ்வாறு பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.
காட்டுப்பகுதியில் அமைந்துள்ள குறித்த நிலத்தில் வீடொன்றும் காணப்படுகிறது. அங்கிருந்தே தாக்குதல்களுக்கான திட்டம் மற்றும் ஆயுத உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டன என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அத்தோடு, நிலக்கீழ் முகாமொன்றை அமைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது நிலத்தை தோண்டும் நடவடிக்கைகளை இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்துள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குறித்த செய்தியை உறுதிப்படுத்த வாழைச்சேனை பொலிஸ் அதிகாரிக்கு தொடர்பினை ஏற்படுத்திய போதும் முறையான தகவல்கள் வழங்கப்படவில்லை.
அத்துடன், இலங்கை இராணுவ பேச்சாளர் சுமித் அத்தபத்துவிடம் இது தொடர்பில் வினவியபோதும், குறித்த தகவல் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.
எனினும், குறித்த பயிற்சி முகாம் அப்பகுதியில் அமைந்திருப்பது அங்கிருக்கும் தகவல்களின் படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பகுதியில் இருந்து டெட்டனேற்றர் வெடிபொருட்களுடன் ஒருவரை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
48 வயதுடைய ஆதம் லெப்பை காதர் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அண்மையில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் வாகன சாரதியான கபூரின் நெருங்கி சகாவென விசாரணைகளில் இருந்து தெரிவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 138 டெட்டனேற்றர் குச்சிகளை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதுடன் கைதுசெய்யப்பட்டவரிடம் குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |