Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பிரச்சாரங்கள் அடங்கிய 20 இருவெட்டுக்களுடன் சிக்கிய இருவர்

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அங்கும்புர, கல்ஹின்ன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி பொலிஸ் விஷேட அதிரடிப் படை முகாம் அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து நடத்திய தேடுதலில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் அந்த அமைப்பின் பிரச்சாரங்கள் அடங்கிய 20 இருவெட்டுக்கள் மற்றும் 02 அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

0 Comments