டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துரே மதுஷ் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இன்றுகாலை 5 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்த இவரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மாகந்துரே மதுஷ் இலங்கையில் நடத்தப்பட்ட பல குற்றச்செயல்கள் மற்றும் கொலைச்சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளார்.
இந்த நிலையில் டுபாயில் விருந்துபசாரம் ஒன்றில் வைத்து மாகந்துரே மதுஷ் உட்பட 30 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இவருடன் கைது செய்யப்பட்ட 30 பேர் ஏற்கனவே நாடு கடத்தப்பட்ட நிலையில், மாகந்துரே மதுஷ் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளார்.
0 Comments