கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டில் தீவிரவாதம் தொடர்பான எச்சரிக்கையை ஞாசார தேரர் கூறி வந்ததாகவும், ஆனால் அவற்றை யாரும் கவனத்திற்கொள்ளவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தேரரின் சுகநலன்களை அறிவதற்காக அங்கு சென்ற விஜயதாச ராஜபக்ஷ ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஞானசார தேரர் எப்போதுமே ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கிறார். கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டில் புல்லுருவிகள் போன்று மறைந்திருந்த தீவிரவாதம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்து வந்தார்.
ஆனால், எங்கள் நாட்டை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களுக்கு இவை புரியாமல் போனமையாலும், அவர்களின் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டிக்கொள்ள முயற்சித்தமையாலும், சிறுபான்மையினரின் வாக்கு வங்கிக்கான பேராசையாலும் இந்த அசம்பாவிதத்தை தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
அதனால் ஞானசார தேரருக்கும் வரம்பு மீறி பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் உயிரை காத்துக் கொள்வதற்கும், போராடியத்திற்கும் பரிசாக இன்று சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஞானசார தேரர் கூறியது போன்று 50 விகாரைகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டாலும் அவர்கள் செவிகளை மூடிக்கொண்டுதான் இருக்கப் போகிறார்கள்.
அதேபோன்றுதான் இந்த நாட்டின் புலனாய்வு துறையினர் சிறையடைக்கப்பட்டுள்ளதுடன், தற்போதுள்ள ரகசிய ஒற்றர் சேவை மழுங்கடிக்கப்பட்டு, அராஜகமான ஆட்சி நடைபெறுவதை தீவிரவாதிகள் தெரிந்து கொண்டு கடந்தமாதம் 21 ஆம் திகதி இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். என கடுமையாக சாடியுள்ளார்.
0 Comments