Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வாகன போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டப்பணத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்கும் வர்த்தமானி


வாகன போக்குவரத்து குற்றங்கள் சிலவற்றுக்கான தண்டப் பணத்தை 25,000ரூபா வரை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளதுடன் இது அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி வாகனத்தை செலுத்துதல் , சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாதவரை சேவைக்கு அமர்த்தல் , மது போதையில் வாகனங்களை செலுத்தல் , ரயில் கடவைகளில் பாதுகாப்பற்ற வகையில் பயணித்தல் , செல்லுபடியான காப்புறுதி பத்திரம் இல்லாமை உள்ளிட்ட குற்றங்களுக்கான தண்டப்பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. -(3)

Post a Comment

0 Comments