Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வரவுசெலவுத் திட்டம் மீது இன்று வாக்கெடுப்பு!

2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. இதில் ஆளும் தரப்பு பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றியீட்டும் என ஆளும் தரப்பு அறிவித்துள்ள அதே வேளை வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கப் போவதாக எதிரணி கூறியுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 5ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்டது. 6ஆம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5.00 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

Post a Comment

0 Comments