Home » » போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய வீதி நிர்மாணம் ; மட்டக்களப்பு மாநகர முதல்வர்

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய வீதி நிர்மாணம் ; மட்டக்களப்பு மாநகர முதல்வர்



மட்டக்களப்பு நகரில் காணப்படும் போக்குவரத்து நெரிசலைத் குறைப்பதற்கு இரண்டு விவசாலமானதும், நேரானதும், நீளமானதுமான, பாதைகள் நிர்மாணிக்கப்படுவதோடு அவை ஒரு வழிப் பாதையாக அறிவிக்கப்படும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்,

வாகன நெரிசலைப் பொறுத்தவரை இப்போதைய மட்டக்களப்பு நகரத்திற்குள் நுழைவதற்கும் வெளியேறுதற்கும் ஒரேயொரு பாதைதான் இருக்கிறது. இதனால்தான் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

இதனை கருத்திற்கொண்டு புதிதாக ஒருபாதையை தேர்ந்தெடுத்து அதனை விசாலமாக்கவுள்ளேன். அது திருமலை வீதியிலுள்ள ஊறணிச் சந்தியில் இருந்து, இருதயபுரம் ஊடாக யூனியன் ஸ்கூல் பாதையை கடந்து கல்லடிப்பாலம் வரை செல்லும். இப்போதுள்ள யூனியன் ஸ்கூல் வீதி, எல்லை வீதியையும் புகையிரத விதியையும் இணைத்து நிற்கிறது. அதன் அகலம் 11 மீற்றர் ஆக மாறும்.

புதிய வீதியின் அகலம் 11 மீற்றராகவே நிர்மாணிக்கப்படும், மட்டக்களப்பு நகரத்திற்குள் வரும் வாகனங்களுக்கும் அங்கிருந்து வெளியேறும் வாகனங்களுக்கும், திருமலை வீதியோடு, புதிதாக விசாலமாக நிர்மாணிக்கப்பட இருக்கும் வீதியையும் பாவிக்க முடியும்.

குறித்த இரு வீதிகளும் ஒருவழிப்பாதையாக அறிவிக்கப்படும், இதனால், வாகனங்கள் நெரிசலின்றி பயணிக்கும். நேரம் மீதப்படுத்தப்படும், விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

யூனியன் ஸ்கூல் வீதியின் அபிவிருத்தி இன்னும் ஒரிரு வாரங்களில் தொடங்கப்படும். இதற்கான அனுமதியை வழங்க இக்காணிக்கு உரித்தான போக்குவரத்து அமைச்சு ஒத்துக்கொண்டுள்ளது என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |