Home » » திருக்கேதீஸ்வர வீதி வளைவு சேதமாக்கப்பட்ட விவகாரம்; சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

திருக்கேதீஸ்வர வீதி வளைவு சேதமாக்கப்பட்ட விவகாரம்; சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

மன்னாரில் மாந்தைப் பகுதியில் வளைவு சேதமாக்கப்பட்டது சம்பந்தமாக விசாரனை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கும்படி பொலிசாருக்கு மன்று கட்டளை.
கடந்த ஞாயிறு (04.03.2019) மன்னார் மாந்தை பகுதியில் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு திருக்கேதீஸ்வர கோயில் வீதியில் வளைவு நிர்மானிக்கும் போது பங்குத்தந்தையின் பார்வையில் கிறிஸ்தவர்கள் சிலரால் அடித்து உடைக்கப்பட்ட நிலையில் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது இதனால் அன்று பொலிசார் இரு சமூகத்தினரின் பிரதிநிதிகளை பதில் நீதவான் முன்னிலையில் ஆஐராக்கியிருந்தனர். அவ் வளைவை தற்காலிகமாக அமைத்துவிட்டு குறிப்பிடத்தினக்கு முன் அகற்றப்பட வேண்டும் அன்ற மன்றின் கட்டளைக்குப் பின் இன்று வெள்ளிக் கிழமை (08.03.2019)) இவ் வழக்கு மீண்டும் விசாரனைக்கு வந்தது.
இவ் வழக்கு இன்று வெள்ளிக் கிழமை (08.03.2019) மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரனைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது இந்து மக்கள் சார்பாக ஆஐரான சட்டத்தரனிகள் மன்றில் தெரிவிக்கையில், வளைவு அமைக்கப்பட்டபோது அவற்றை சேதப்படுத்திய சம்பந்தமாக பொலிசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இருந்து வருகின்றனர்.
அதாவது வளைவை தேசப்படுத்தியவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் பொலிசார் மேற்கொள்ளாது அசமந்த போக்கில் இருப்பதாக மன்றில் சுட்டிக்காட்டினர். இது விடயமாக சிரேஸ்ட சட்டத்தரனி கங்காகரன் மற்றும் சட்டத்தரனி வினோ ஆகியோர் இணைந்து மன்றுக்கு ஒரு விண்ணப்பத்தையும் சமர்பித்தனர்.
இதற்கு பொலிசார் மன்றில் தெரிவிக்கையில் இவ் விடயமானது இரு மத்தினருக்கிடையான பிரச்சனையாக இருப்பதால் நாங்கள் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றோம். அத்துடன் விசாரனையில் சந்தேக நபர்களையும் நாங்கள் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம் என்றனர்.
அவ்வேளையில் வளைவை சேதமாக்கிய நபர்கள் அடங்கியதாக கூறப்பட்ட வீடியோ பிரதி ஒன்றை இந்து மக்கள் சார்பாக மன்றில் ஆஐரான சட்டத்தரனிகள் மன்றில் சமர்பிக்க முயன்றபோது அதற்கு கத்தோலிக்க மக்கள் சார்பாக ஆஐராகியிருந்த சட்டத்தரனிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து இதை தற்பொழுது மன்றில்
சமர்பிக்கப்படுவதை எதிர்ப்பதாகவும் பொலிசார் கேட்கும் பட்சத்தில் அதை அங்கு சமர்பிப்பதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லையென தெரிவித்தமையால் இவ் வீடியோ மன்றில் சமர்பிக்கப்படவில்லை.
கத்தோலிக்க மக்கள் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரனி துசித் ஜெகந்தாசன், செபநேசன் லோகு உட்பட பல சட்டத்தரனிகள் ஆஐராகியிருந்தனர்.
இதற்கு மன்று கட்டளை பிறப்பிக்கையில் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்டவர்களை விசாரனை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கும்படி பொலிசாருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டதுடன் இவ்விடத்தில் இவ் வளைவை மீண்டும் வைப்பதா? இல்லையா என்பதை எந்த கட்டளையும் இவ் விசாரனையின்போது
வழங்கப்படவில்லை. இவ் வழக்கு விசாரனை பிரிதொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏற்கனவே சிவராத்திரியை முன்னிட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்ட வளைவை நான்கு நாளைக்குள் அகற்றிவிட வேண்டும் என மன்றின் கட்டளைக்கு அமைய அவ் வளைவு தற்பொழுது அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |