Home » » ரயில்களில் பெண்களுக்கென தனிப் பெட்டிகள் : இன்று முதல் அமுல்

ரயில்களில் பெண்களுக்கென தனிப் பெட்டிகள் : இன்று முதல் அமுல்


இன்று முதல் இலங்கையில் ஏழு அலுவலக ரயில்களில் பெண்களுக்கென தனியான பயண பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்கு பொது போக்குவரத்து சேவைகளில் அடிக்க இடம்பெறும் சிரமங்கள் மற்றும் தொல்லைகளிலிருந்து மீட்டெடுப்பதற்காக போக்குவரத்து அமைச்சர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இதற்கமைவாக காலை 6.30 மணிக்கு மீறிகம ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டைவரை சேவையில் ஈடுபடும் இலக்கம் 525 ரயிலிலும் ரம்புக்கணையில் நிலையத்திலிருந்து காலை 5.57 மணிக்கு கொழும்பு கோட்டையை நோக்கி பயணிக்கும் ரயிலிலும் பொல்காவலை ரயில் நிலையத்திலிருந்து காலை 5.25மணிக்கு கொழும்பு கோட்டைவரை செல்லும் ரயிலிலும் மஹவ ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயிலிலும் புத்தளம் ரயில் நிலையத்திலிருந்து காலை 4.50 மணிக்கு மருதானையை நோக்கிசெல்லும் ரயிலிலும் வங்கதெனிய ரயில் நிலையத்திலும் காலிரயில் நிலையத்திலும் காலை 5.00 மணிக்கு புறப்பட்டு மருதானை வரைசெல்லும் சமுத்திரா தேவி ரயிலிலும் மாத்தறை ரயில் நிலையத்திலிருந்து செல்லும் அலுவலக ரயில்களிலும் மகளிருக்கான ரயில் பயண பெட்டிகள் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தின் கீழ் அலுவலக ரயில்களில் மகளிர்களுக்கான ரயில் பெட்டிகள் இணைக்கப்படுவதுடன் மகளிர்களுக்கு எதிர்காலத்தில் ஏனைய ரயில் சேவைகளிலும் இவ்வாறான பயண வசதிகள் செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |