மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணவிரு குடும்பங்களுக்காக அமைக்கப்பட்ட 39 வீடுகள் எதிர்வரும் 10ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாக ரணவிரு சேவா அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் ரீ.எச்.கீர்திகா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று காலை ரணவிரு சேவா சங்கத்தின் ஊடாக வீடுகள் வழங்கப்பட உள்ளவர்களுக்கான கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதில் தலைமை வகித்து உரையாற்றும் போதே ரீ.எச்.கீர்திகா ஜயவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணவிரு சேவா பயனாளிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 39 குடும்பங்களுக்காக ஒவ்வொன்றும் தலா 2,250,000 ரூபாய் செலவில் வீடுகள் அமைக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இந்த திறப்பு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு வீட்டு பத்திரங்களை வழங்கவுள்ளனர்.
அன்றைய தினம் 500 ரணவிரு குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments