தனது முன்மொழிவுகளில் ஒன்றாக அரசாங்கம் 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையை ரத்துசெய்ய முடிவெடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துளார்.
பொலநறுவையில் நிகழ்வு ஒன்றில் நேற்று உரை ஆற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர், வசதி இல்லாத மாணவர்கள் பாடசாலைக்கு கூடுதல் வசதிகளுடன் செல்வதற்கான சந்தர்ப்பதை வழங்கும் பொருட்டே புலமைப்பரிசில் பரீட்சை கொண்டுவரப்பட்டதாகவும் ஆனால் இன்று பிரபல பாடசாலைகளுக்கு செல்வதற்கான போட்டி பரீட்சையாக மாறிவிட்டதாகவும் அவர் கூறினார்.
புலமை பரிசில் பரீட்சையில் பெரும் பிரச்சினை இருப்பதாகவும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் அனேகமானவர்கள் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடையாதவர்களே என்றும் அவர் கூறினார்.
0 Comments