Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நடிகர் விவேக்கிற்கு அல்- மீஸான் பௌண்டசன் ஸ்ரீலங்கா அமைப்பினால் “கலைமகன்” விருது வழங்கி கௌரவிப்பு!

 
தென்னிந்திய திரைப்பட நடிகர் பத்மஸ்ரீ டாக்டர் விவேக் அவர்களுக்கு இலங்கையை சேர்ந்த அல்- மீஸான் பௌண்டசன்,ஸ்ரீலங்கா அமைப்பினால் “கலைமகன்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அல்- மீஸான் பெளண்டசனின் தவிசாளர் அல்ஹாஜ் நூருள் ஹுதா உமர் தலைமையிலான இந்த அமைப்பினர் மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் பசுமை திட்டமான ஒரு இலட்சம் மரங்களை நடும் திட்டத்தை வெற்றிகரமாக செய்துவரும்
பத்மஸ்ரீ விவேக் அவர்களின் சேவையை பாராட்டுவதுடன். அவர் சினிமா மூலம் பல நல்ல சிந்தனைகளை மக்கள் மத்தியில் விதைக்கும் அந்த செயலை  கௌரவிக்கும் முகமாக அவருக்கு இந்த “கலைமகன்” விருதை வழங்குவதாக தெரிவித்தனர்.
பத்மஸ்ரீ விவேக் அவர்களுக்கு பொன்னாடை போத்தி விருது வழங்கி வைத்த  இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் கௌரவ சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், மேலும் பல  சமய பெரியார்கள் மற்றும்  அல்-மீஸான் பௌண்டசன்,ஸ்ரீலங்கா அமைப்பின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments