மட்டக்களப்பு ஏறாவூர் காளிகோயில் தோட்டம் வீதியிலுள்ள தனியார் காணியொன்றில் இருந்து மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குற்றத் தடயவியல் பொலிஸார் தடயங்களை பதிவு செய்த பின்னர் மோட்டார் குண்டினை செயலிழக்கச் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காளிகோயில் தோட்ட வீதியிலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து மோட்டார் குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து குடியேறிய தனியார் குடியிருப்பாளரான ஆனந்தசாமி அரசம்மா என்பவரின் காணியிலிருந்து இந்த மோட்டார் குண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த காணி உரிமையாளர் நேற்று மாலை தனது வீட்டு முற்றத்தை துப்பரவு செய்து குப்பைகளை வெட்டிப் புதைப்பதற்காக குழி தோண்டிய போதே மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து இன்றைய தினம் குறித்த இடத்தில் குற்றத் தடயவியல் பொலிசார் தடயங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, மோட்டார் குண்டினை செயலிழக்க வைக்கும் பிரிவு ஊடாக மோட்டார் குண்டினை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
0 Comments