Home » » இலங்கையில் நிறுத்தப்படும் குறிப்பிட்ட வகை வாகன இறக்குமதி!

இலங்கையில் நிறுத்தப்படும் குறிப்பிட்ட வகை வாகன இறக்குமதி!

இலங்கையில் அதிகளவில் விற்பனையாகும் வாகனமான Wagon-R கார்கனை இனிமேல் இறக்குமதி செய்யாதிருக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்ச்சிகே தெரிவித்தள்ளார்.
கொழும்பில் நேற்று இலங்கை வாகன இறக்கமதியாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் இருந்து இதுவரை 55,000 இற்கும் அதிக Wagon-R வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 50,000 இற்கும் அதிகமானவை Hybrid என இனங்காணப்பட்டு சுங்கப்பிரிவால் வெளியாக்கப்பட்டுள்ளதாகவும் மெரின்ச்சிகே மேலும் கூறியுள்ளார்.
2019 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டத்தில் வாகனங்னளுக்கான வரி அறவீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் Wagon-R வாகன இறக்குமதியை நிறுத்துவதன் மூலம் நாட்டின் வாகன இறக்குமதி தொழிற்துறை பாரிய வீழ்ச்சியை எதிர்கொள்ளும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய Wagon-R வாகனத்தின் மூலம் 16,25,000 ரூபா வரியை அறவிடுவதாகவும் குறித்த வரி கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் 8,25,000 ரூபாவாக காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் சுங்கத்தினால் Wagon-R வாகனம் பெற்றோல் வாகனம் எனக் கருதி வெளியிட்டுள்ளமையால் 1,25,000 இற்கு மேலதிக வரியை செலுத்த வேண்டியுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் கீர்த்தி குணவர்தன கருத்துத்தெரிவிக்கையில்,
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதிக்கான வரி அறவீடுகளில் 48,000 மில்லியன் ரூபாயை எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த தொகையானது ஒட்டுமொத்த வரி அறவீட்டு வருமானத்தில் 38 சதவீதம். வாகன இறக்குமதி வீழ்ச்சியடையும் பட்சத்தில் அனைத்து வரி அறவீடுகளும் அற்றுப்போய் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
இதேவேளை சுங்க திணைக்களத்தினால் அநியாயமாக Wagon-R வாகனங்களுக்காக அறவிடும் வரியை நிறுத்துவதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |