Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தனி நபர் வரி 11,000 ரூபாவினால் உயர்வடைந்துள்ளதாம்


அரசாங்கத்தின் வரி அறவீட்டு முறைமைகளின்படி தனி நபர் வரி இந்த வருடத்தில் 11,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய ஜே.வி.பி எம்.பியான விஜித ஹேரத்தே இதனை தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டத்தில் சாதாரண மக்கள் மீது ஒருபக்கத்தில் பாரிய கடன் சுமைகள் சுமத்தப்பட்டுள்ளதுடன் மற்றுமொரு பக்கத்தில் பாரியளவு வரிச்சுமைகளும் சுமத்தப்பட்டுள்ளது. 2018இல் காணப்பட்ட ஒரு இலட்சத்து 6200 கோடி ரூபாவிலிருந்து இம்முறை ஒரு இலட்சத்து 29ஆயிரத்து 300 கோடி ரூபா வரை வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.. குறிப்பாக 23ஆயிரத்து 100 கோடி ரூபா மக்களின் பொருட்கள் , சேவைகள் மீதான வரிகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக கடந்த தனி நபர் வரி அறவிடு வருடத்தில் 49,000 ரூபாவாக இருந்தது. இந்த வருடத்தில் அது 60704 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த வருடத்தை விடவும் இந்த வருடத்தில் தனி நபர் மீதான வரி 11,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாதாரண பிரஜைகளின் வருமானம் அதிகரிக்கபடவில்லை. அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான யோசனை இல்லை. என அவர் தெரிவித்துள்ளார். -(3)

Post a Comment

0 Comments