Home » » ஈழத்தில் இயல்புநிலை திரும்பவில்லை! மகிந்தவின் வருகைக்கு கர்நாடகாவில் கடும் கண்டனம்

ஈழத்தில் இயல்புநிலை திரும்பவில்லை! மகிந்தவின் வருகைக்கு கர்நாடகாவில் கடும் கண்டனம்


எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இன்றைய தினம் இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்கின்ற நிலையில் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் மகிந்தவின் வருகைக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவர் சி.இராசன், செயலாளர் ப.அரசு ஆகியோர் மகிந்தவின் வருகைக்கு கண்டன அறிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பெப்ரவரி 9ஆம் திகதி பெங்களூருக்கு வருகைத்தர திட்டமிட்டுள்ளார்.


அவரது வருகையை கர்நாடகத் தமிழர்களின் சார்பில் கடுமையாக கண்டிக்கின்றோம்.
60 ஆண்டுகால வரலாறு கொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை என்ற பொய்யான பரப்புரையின் பேரில் 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்த இறுதிப்போரில் 1.5 லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனோர் பட்டியலில் உள்ளனர். தமிழர்களின் இன அழிப்புப்போரை திட்டமிட்டு நடத்தி 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னும் ஈழத்தில் இயல்புநிலை திரும்பவில்லை.
அனாதைகளாக வெளியேறிய ஈழத்தமிழர்கள் உலகின் பல நாடுகளில் அகதிகளாக எண்ணற்ற பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
ஈழத்தில் உள்ள தமிழர்களோ இலங்கை அரசின் இராணுவக் கட்டுப்பாட்டில் பிணைக் கைதிகளை போல நடத்தப்பட்டு வருகின்றனர்.
இதற்கு காரணமான ராஜபக்சவை தமிழர்கள் பெருமளவில் வாழும் கர்நாடகத்தில் அனுமதிக்கக் கூடாது, என குறிப்பிடப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |