Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பிலிருந்து மதுஷ் கும்பலுக்கு விநியோகிக்கப்பட்ட ஒருதொகை துப்பாக்கிகள்! கலக்கத்தில் முக்கிய புள்ளிகள்!!

டுபாயில் கைதுசெய்யப்பட்ட மாகந்துரே மதுஷ் கும்பலுக்கு மட்டக்களப்பிலிருந்து ஒருதொகை துப்பாக்கிகளை விநியோகித்த முக்கிய புள்ளி ஒருவர் விசாரணையில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் எண்பதுக்கும் மேற்பட்ட T-56 ரக துப்பாக்கிகள் மட்டக்களப்பிலிருந்து விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தொடர்பான விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மதுஷ் கும்பலுடன் தொடர்பைப் பேணிய சில அரசியல்வாதிகள் குறித்த தகவலும் கிடைக்கபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மதுஷ் மற்றும் அவரது சகாக்களை இலங்கைக்கு கொண்டுவராமல் டுபாயில் வைத்தே தண்டனையை உறுதிப்படுத்துவதற்கு குறித்த அரசியல் வாதிகள் அரசாங்கத்துக்கு அழுத்தங்களைப் பிரயோகித்துவருவதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை பாதாள உலகக் குழு தலைவர் மதுஷுக்கு டுபாயில் உள்ள சொத்துக்கள் தொடர்பான விபரங்களும் விசாரணைகளின்மூலம் தெரியவந்திருக்கின்றன. இலங்கையிலிருந்து டுபாய்க்கு வேலைவாய்ப்புக்களுக்காக ஆட்களை எடுக்கும் நிறுவனம் ஒன்றை மதுஷ் நடத்திவந்ததாக தெரியவந்திருக்கிறது.
எவ்வாறாயினும் மதுஷ் கும்பலுடன் பிடிபட்ட நபர்களில் இராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருந்த மற்றொரு நபர் தொடர்பான பின்னணித் தகவல்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த நிலையில் இதுதொடர்பான விபரங்களை தொடர்ந்தும் இரகசியமாகவே பேணிவரும் பொலிஸார் உரிய நேரத்தில் அதுகுறித்து வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு வெளியாகின்ற சந்தர்ப்பத்தில் எதிர்பாராத சில கைதுகள் அதிர்ச்சிகரமானதாக அமையும் என தகவலறிந்த வடாரங்கள் கூறுகின்றன.

Post a Comment

0 Comments