Home » » மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஏற்படும் தற்கொலைகளை கட்டுப்படுத்த தீர்மானம் நிறைவேற்றம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஏற்படும் தற்கொலைகளை கட்டுப்படுத்த தீர்மானம் நிறைவேற்றம்


மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்ற தற்கொலைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் சில முன்மொழிவுகள் மட்டக்களப்பு முதல்வாரால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அது ஏகமனதாக சபையினாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 15ஆவது பொது அமர்வானது இன்றைய தினம் (07.02.2019) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர், மாநகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிதிக்குழு மற்றும் ஏனைய நிலையியற் குழுக்களின் சிபாரிசுகள், மாதாந்த வரவு செலவு அறிக்கை தொடர்பான விடயங்கள் மற்றும் மாதாந்த கொடுப்பனவு உட்பட கொள்வனவு விடயங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.

இன்றைய அமர்வின் விசேட அம்சங்களாக மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் மட்டக்களப்பு நகரத்தினதும் அதற்கு ஓர் அடையாளமாக இருக்கின்ற கல்லடிப் பாலத்தில் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்ற தற்கொலைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் சில முன்மொழிவுகள் முதல்வாரால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அது ஏகமனதாக சபையினாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதன்படி கல்லடிப் பாலத்தில் உல்லாசப் பயணத்துறை சார்ந்த கடைகளை அமைத்து கொடுப்பதன் ஊடாக அவ்விடத்தை தொடர்ச்சியான பாதுகாப்பிற்கும் பயன்பாட்டிற்குமான இடமாக மாற்றுவதென்றும், இவ்வாறான தற்கொலைக்கான மனநிலைக்குள் செல்கின்றவர்களை உள ஆற்றுப்படுத்துகைகளின் ஊடாக அவர்களது மனநிலையை மாற்றம் செய்து கொள்வதற்கான வலையமைப்பின் (website) ஊடாக “கோவை” App எனப்படும் மென்பொருள் உருவாக்கப்பட்டு அதனை கையடக்க தொலைபேசியினூடாக பயன்படுத்துவதற்கான நடைமுறை ஒன்றும் உருவாக்கப்பட் அதனை பாவனைக்கு விடுதல் தொடர்பாகவும் ஆரயபடபட்டுத அத்துடன் உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களை உடன் காப்பாற்றுவதற்கு வசதியாக 24 மணி நேர படகு ரோந்து சேவையை அப்பகுதியில் ஆரம்பிப்பதற்கும் சபையினால் அனுமதியளிக்கப்படடுள்ளது.

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் வதிகின்ற தகவல் தொழில்நுட்ப தகமை கொண்டவர்களின் தொழில்நுட்பம் சார்ந்த வினைத் திறனையும் அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய்வதற்கான ஓர் களமாக ஐ.ரி.பார்க் (ஐ.வு.Pயசம) ஒன்றினை ஏற்படுத்துவத்துவதற்கும், அவர்களுக்கான வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கிக் கொடுப்பதற்குமான முதல்வரின் முன்மொழிவும் ஏகமனதாக சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பில் விளையாட்டுத் துறைக்கென அதுவும் குறிப்பாக உதைபந்தாட்டத்திற்காகவும், இவ் மைதானத்தை சரியாக பராமரிப்பதற்காகவும் பெரும் சேவை செய்து அமரத்துவமடைந்த வண பிதா வெபர் அடிகளார் அவர்களின் பெயரில் எமது விளையாட்டு மைதானம் தற்போது பல்வேறு வசதிகளுடன் விளங்குகின்றது. இந்த நிலையில் அப்பெருந்தகைக்கு மேலும் கௌரவத்தினை வழங்கும் வகையில் வெபர் மைதானத்தில் அமரர். வணபிதா ளு.து.வெபர் அடிகளார் அவர்களின் திரு உருவச் சிலை ஒன்றினை நிறுவுவதற்கும், வெபர் மைதான பிரதான வாயிலை அடையாளப்படுத்துவதற்கு ஏதுவாக “முகப்பு வளைவு” ஒன்றினை அமைப்பதற்குமான முன்மொழிவு.

பொதுமக்களின் அன்றாட போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்கில் புகையிரத வீதியையும் - எல்லை வீதியையும் இணைக்கின்ற புகையிரத ஒழுங்கையின் போக்குவரத்துப் பிரச்சனைகள் தொடர்பாக அவ்வீதியை அகலமாக்கி புனரமைப்பு செய்வதற்கான தீர்மானமொன்றும் சபையில் நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |