Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

காணி உறுதிப்பத்திரங்களை உடனடியாக வழங்குமாறு ஹிஸ்புல்லா உத்தரவு!


கிழக்கு மாகாணத்தில் இதுவரை காணி உறுதிப்பத்திரங்கள் வழங்காதவர்களுக்கு உடனடியாக பத்திரங்களை வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி பெப்ரவரி 16 ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மூன்று மாவட்டத்திற்கும் பிரித்து கையளிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாமை தொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர், ஆளுநர் செயலகத்தில் காணி அமைச்சினுடைய செயலாளர், மாகாண காணி ஆணையாளர், அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டமொன்று இடம்பெற்றது.
இந்தக் கூட்டித்தின்போது, கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் காணி உறுதிப் பத்திரங்கள் கொண்டுவரப்பட்டும் வழங்கப்படாத நிலையிலும், சிறிய காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலும், நீண்ட நாட்களாக அந்த காணிகளில் வாழுகின்ற மக்கள் தங்களுடைய காணி உறுதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளமை தொடர்பாக ஆளுநர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.
இதனையடுத்து கிழக்கு மாகாணத்திலுள்ள 15 ஆயிரம் வழங்கப்படாத காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் முடிவைந்தும் காரியாலயங்களில் தேங்கிக் கிடக்கும் பத்திரங்கள் ஆகியவை அனைத்தும், பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அதன் வேலைகளை பூர்த்தியாக்கி மக்களிடம் கையளிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments