Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரலாம்!


சுங்க ஊழியர்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் தொழிற்சங்க நடவடிக்கைகளால் இறக்குமதி செய்யப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் பல துறைமுகத்திலேயே தேங்கிக் கிடப்பதாக கூறப்படுகின்றது.

அந்த பொருட்களை வெளியே எடுப்பதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் சந்தையில் அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் நிலைமை காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments