Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

விரைவில் ஜனாதிபதி தேர்தல்?


விரைவில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தமது ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவையே களமிறக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

ஜனாதிபதி மீண்டும் போட்டியிடுவாராக இருந்தால் முன் கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்றே கூறப்படுகின்றது.

இது வரை ஜனாதிபதி தானே போட்டியிடப் போவதாக உத்தியோகபூர்வமாக தெரிவிக்கவில்லை. ஆனபோதும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் மற்றும் தேசிய அமைப்பாளர் உள்ளிட்டோர் மைத்திரிபால சிறிசேனவே தமது வேட்பாளர் என அறிவித்து வருகின்றனர். முன் கூட்டியே தேர்தல் நடத்தப்படுமாக இருந்தால் கட்டாயமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே போட்டியிடுவார். இதன்படி விரைவில் தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்கப்படலாம் என நம்பப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments