Home » » கஞ்சா கடத்தல் வன்முறைக் கும்பல் தொடர்பில் மக்கள் அச்சமின்றி தகவல் வழங்கலாம்

கஞ்சா கடத்தல் வன்முறைக் கும்பல் தொடர்பில் மக்கள் அச்சமின்றி தகவல் வழங்கலாம்


(பாறுக் ஷிஹான்)  கஞ்சா கடத்தல் மற்றும் ஆவாக் குழு தொடர்பில் பொதுமக்கள் எந்தப் பயமுமின்றி தகவல்கள் வழங்க முடியும். பொது மக்கள் வழங்கும் தகவல்கள் பாதுகாக்கப்படும். அவ்வாறு இரகசிய தகவல்கள் வழங்கவிரும்பும் பொது மக்கள் எனது தொலைபேசி இலக்கத்துக்கே தகவல்களை வழங்க முடியும் என  வடமாகாண சிரேஸ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்தார்.

காங்கேசன்துறையில் உள்ள வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இன்று (02) பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றது.

கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கிய கிளிநொச்சி மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

கஞ்சா கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் தேவையான தகவல்களை பொலிஸாருக்கு வழங்க முடியும். தகவல் வழங்குவது தொடர்பாக இரகசியம் பேணப்படும். தகவல் தருபவர்கள் தொடர்பில் யாருக்கும் செல்லமாட்டோம்.வேறு ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால், அந்தப் பிரச்சினைகளை நாங்கள் பொறுப்பேற்றுக்கொள்வோம். கிளிநொச்சி சம்பவம் தொடர்பாக பரிசீலணை செய்த போது, அந்த சிறுவன் துவிச்சக்கரவண்டி ஓடிப் போனபோது, மோட்டார் சைக்கிள் வருவதைஅவதானிக்காமல் சென்றமையினால், விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் வழங்கியமைக்காக சிறுவன் மீது தாக்குதல் நடாத்தப்படவில்லை.

அந்த மாணவனின் தாக்குதலையடுத்து அவரது பாடசாலை மெய்வன்மைப் போட்டி இடைநிறுத்தப்படவில்லை. அந்தப் பாடசாலை பழைய மாணவர்களால் எழுப்பப்பட்ட எதிர்ப்பால்தான் மெய்வன்மை போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு இடையே இணக்கம் ஏற்படுத்தப்பட்டால் போட்டி நடைபெறும்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான தகவல்கள் கிடைத்தால், பொது மக்கள் தேவையான நேரங்களில் தகவல்களை வழங்க முடியும். பொலிஸ் மா அதிபர் மற்றும் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்களிடம் தகவல்களை வழங்க முடியும். பொலிஸாருக்கு வழங்கும் தகவல்கள் இரகசியமாக பாதுகாக்கப்படும்.

வடமாகாண மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் தான், தகவல்கள் ஏனைய பொலிஸ் அதிகாரிகளிடம் வழங்க முடியாவிடின், வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தொலைபேசிக்கு அழைத்து தகவல்களை வழங்க முடியும். 
வுடமாகாணத்தை அச்சுறுத்திய ஆவா குழுவைக் கட்டுப்படுத்த வடமாகாண மக்கள் வழங்கிய தகவல் தான் உதவியது.
இப்போது, ஆவாக்குழுவைச் சேர்ந்தவர்கள், அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒரு சிலரை தவிர ஏனையோர் கைதுசெய்யப்படவில்லை. அவர்களையும் மிக விரைவில் கைதுசெய்வோம். இவ்வாறு யாழ்ப்பாணத்து மக்கள் வழங்கிய தகவல்களின் பிரகாரமே கைதுசெய்தோம். 

எனவே, பொது மக்கள் வழங்கும் தகவல்கள், மிகப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளப்படும். ஆகையினால், பொது மக்கள் எந்த பயமுமின்றி தகவல்களை வழங்க முடியும் – என்றார்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |