Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த விபத்தில் உயிரிழந்த விரிவுரையாளர் வீட்டில் புதிய ஆளுநர்!

மட்டக்களப்பு குடியிருப்பு பிரதேசத்தில் அண்மையில் விபத்துக்குள்ளாகி மரணமடைந்த 49 வயதுடைய மட்டக்களப்பு அரசினர் கலாசாலையின் விரிவுரையாளர் க.கோமலேஸ்வரனின் வீட்டிற்கு இன்று கிழக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
அவருடைய பிரிவால் வாடும் மனைவி ,மகன் ,குடும்பத்திற்கு ஆளுநர் ஆறுதல் வார்த்தைகளை கூறியுள்ளார்.
இதேவேளை, மரணமடைந்த விரிவுரையாளரின் மனைவி வாழைச்சேனை கிண்ணையடியில் அமைந்துள்ள பாடசாலையில் ஆசிரியராக கடமை புரிகின்றார்.
அவரின் நன்மை கருதி ஆசிரியர் வசிக்கும் செங்கலடி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு உடனடியாக இடமாற்றம் வழங்கும்படி மாகாண கல்வி பணிப்பாளருக்கு கிழக்கு ஆளுனர் உத்திரவு பிறப்பித்துள்ளார்.




Post a Comment

0 Comments