Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு பெரிய போரதீவுக் குளக்கரையில் நின்ற மாடு ஒன்றை குளத்தில் பதுங்கியிருந்த முதலை ஒன்று கவ்விப் பிடித்து இழுத்த சம்பவம்

மட்டக்களப்பு பெரிய போரதீவுக் குளக்கரைக்குச் சென்ற மாடு ஒன்றை குளத்தில் பதுங்கியிருந்த முதலை ஒன்று கவ்விப் பிடித்து இரைக்காக இழுத்துச் சென்ற சம்பவம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
எருமை மாடுகள் அந்த குளக்கரையில் மேய்வதும், குளத்தில் உறங்குவதும் வழக்கம் என கூறப்பட்டுள்ளது.
அதுபோல் இன்றைய தினமும் எருமை மாடு ஒன்று அந்த குளத்திற்குச் சென்ற வேளை அதனை நன்கு கொளுத்த முதலை ஒன்று அடித்து இழுத்துச் சென்ற காட்சி பதிவாகியுள்ளது.
இதன்போது அந்த வழியால் சென்றவர்கள் குறித்த முதலையை துரத்துவதற்கு முற்பட்டுள்ளனர்.
ஆனாலும் அதனைப் பொருட்படுத்
தாத முதலை மாட்டை அடித்து குளத்தின் நடுப்பகுதிக்கு இழுத்துச் சென்றதாக இதனை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.



Post a Comment

0 Comments