Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள் புதிய வருடத்தில் மீண்டும் ஆரம்பம்


புதிய அரசியலமைப்பு தொடர்பான பணிகளை இந்த வருட ஆரம்பித்திலிருந்து ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதன்போது அரசியலமைப்பு தொடர்பாக சில விடயங்களுக்கு கட்சிகள் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக ஒற்றையாட்சி என்ற விடயத்திலும் , பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் விடயத்திலும் மாற்றம் மேற்கொள்ளாதிருப்பதற்கும் தற்போதைய அரசியலமைப்பில் அது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தில் ஒரு எழுத்தையேனும் மாற்றாது மூன்று மொழிகளிலும் அவ்வறே குறிப்பிடுவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments