இலங்கை வரலாற்றில் அதிகளவான ஹெரோயின் மீட்கப்பட்ட முதலாவது சம்பவமாக இது அமைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 35 மற்றும் 38 வயதுடைய பங்களாதேஷ் பிரஜைகள் இருவர் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் தெஹிவளை பகுதியில் சொகுசு வீடொன்றை வாடகைக்கு பெற்று அங்கிருந்து போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இவர்கள் இலங்கைக்கு வந்து போதைப் பொருள் விற்று சொகுசு வீடொன்றை விலைக்கு வாங்கியுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து கப்பல் மற்றும் விமானங்கள் மூலம் போதைப் பொருட்களை கொண்டு வந்து அவற்றை வாகனங்களில் எடுத்துச் சென்று குறித்த வீட்டில் பதுக்கி வைத்து விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இவ்வேளையில் இவர்களால் விநியோகிக்கப்பட்டிருந்த போதைப் பொருள் பொதியொன்று தெஹிவளை பகுதியில் நபரொருவரிடமிருந்த மீட்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்காண்டு நேற்றைய தினம் குறித்த வீட்டை சுற்றி வளைத்து போதைப் பொருட்களை மீட்டுள்ளனர். இதன்போது கேக் பெட்டிகளில் பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. -(3)
0 Comments