கேரள மாநிலம் சபரிமலை ஆலயத்திற்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக லட்சக்கணக்கான பெண்கள் இணைந்து மனித சங்கிலி பேரணி நடத்தினார்கள்.
அரசு ஊழியர்கள், மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இணைந்து 620 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த மனித சங்கிலி பேரணி நடத்தியுள்ளனர் மாநிலத்தில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் இந்த பேரணி நடைபெற்றது.கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 50 லட்சம் பெண்கள் இந்த பேரணியில் கலந்துக் கொண்டனர் என்று கேரள மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





0 Comments