Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ரணிலுடன் எந்த ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை : தமிழ் கூட்டமைப்பு


ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையொப்பமிடவில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவித்து ஒப்பந்தமொன்று சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள நிலையிலேயே தமிழ் கூட்டமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.

அவ்வாறாக எந்தவொரு ஒப்பந்தமும் செய்யப்படவில்லையெனவும். ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் தமிழ் கூட்டமைப்பு அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளது. -(3)

Post a Comment

0 Comments