Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பழைய அரசின் நடைமுறை மீண்டும் !! பாடசாலை சீருடை வவுச்சர் விநியோகிக்க ஜனாதிபதி உத்தரவு!!

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரிய வசத்தின் படத்துடன் அச்சிடப்பட்டிருந்த,மாணவர்களுக்கான சீருடைத் துணி வவுச்சர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
கூட்டு அரசில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலர் அகிலவிராஜ் காரியவசம் கல்வி அமைச்சராகப் பதவி வகித்திருந்தார்.
அப்போதைய கல்வி அமைச்சரின் படத்துடன், மாணவர்களுக்கான சீருடைத்துணி வவுச்சர்கள் அச்சிடப்பட்டு தயார்நிலையில் இருந்த போது, கடந்த ஒக்ரோபர் 26ஆம் திகதி, கூட்டு அரசை ஜனாதிபதி பதவி கவிழ்த்தார்,
இதனை அடுத்து. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் கல்வி அமைச்சர் விஜய தாஸராஜபக்ஷ, கடந்த நவம்பர் 2ஆம் திகதி இந்தச் சீருடைத் துணி விநியோகத்துக்கான வவுச்சர்கள் வழங்குவதைத் தடை செய்தார்.

Post a Comment

0 Comments